விரைவில் ஜெயா டி.வி.,யில் மந்திரம் ஒரு தந்திரம்

ஞாயிற்றுக்கிழமைகளில் புத்தம் புது நிகழ்ச்சிகளைக் களம் இறக்க திட்டமிட்டுள்ளது ஜெயா டி.வி. மற்ற தொலைக்காட்சி குழுமங்களைப் போல் குழந்தைகளை கவரும் தனி சேனல் ஜெயா டி.வி.யில் இல்லாததால், தொடர்ந்து குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளை அதிகளவில் களம் இறக்கும் முடிவிற்கு ஜெயா டி.வி., வந்துள்ளது. இதன் தொடக்கமாக "மந்திரம் ஒரு தந்திரம்' என்ற பெயரில் மேஜிக் நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்புகிறது. ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் பிரபல மேஜிக் நிபுணர் தயா பங்கேற்கிறார்.

 நான் மகான் அல்ல

வெண்ணிலா கபடிகுழு படத்தை இயக்கிய டைரக்டர் சுசீந்திரன் அடுத்து இயக்கியிருக்கும் புதிய படம் 'நான் மகான் அல்ல'.​ இதில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார்.​ காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார்.​ முக்கிய வேடங்களில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.​ ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. யாரைப் பற்றியும் கவலைப்படாமல் மற்றவர்களை நக்கல்,​​ நையாண்டி செய்து வாழும் ஓர் இளைஞனுடைய வாழ்க்கையில் ஏற்படும் திடீர் திருப்பங்களே கதை.​ இசைக்கும் பாடல்களுக்கும் முக்கியத்துவம் அளித்து ஜனரஞ்சகமான படமாக உருவாகியிருக்கிறது நான் மகான் அல்ல.

வசனம் -​ பாஸ்கர் சக்தி.​ இசை -​ யுவன்ஷங்கர்ராஜா.​ பாடல்கள் -​ நா.முத்துக்குமார்,​​ யுகபாரதி,​​ பிரான்சிஸ்.​ ஒளிப்பதிவு -​ மதி.​ கலை -​ ராஜீவன்.​ தயாரிப்பு -​ கே.ஈ.ஞானவேல். கிளவுட் நைன் மூவிஸ் சார்பில் தயாநிதி அழகிரி ‌படத்தை வெளியிடுகிறார்.

 

 

Today Hot

filmடோனிக்கு திருமணம் ஆகிவிட்டதால் நடிகர் ஆர்யாவுடன் காதலா? நடிகை லட்சுமிராய் .......

கிரிக்கெட் வீரர் டோனி தன்னுடன் படித்த சாக்ஷி என்ற பெண்ணை திடீர் திருமணம் செய்துகொண்டதை அடுத்து, அவருக்கும், நடிகை லட்சுமிராய்க்கும் இடையே இருந்த `கிசுகிசு' செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது.

 

டோனி திருமணம் செய்துகொண்டதால், லட்சுமிராயின் கவனம் இப்போது ஆர்யா பக்கம் திரும்பி இருப்பதாக, கோடம்பாக்கம் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது. இதுபற்றி லட்சுமிராயிடம், `தினத்தந்தி' நிருபர் கேட்டார். ``இது, என்ன புது கதையாக இருக்கிறது?'' என்று சிரித்தபடி லட்சுமிராய் பேச ஆரம்பித்தார். அவர் கூறியதாவது:- ``ஆர்யா எனக்கு ரொம்ப நல்ல நண்பன். எங்கள் `குரூப்'பில் அவனும் இருக்கிறான். எங்கள் இரண்டு பேரையும் பற்றி அவ்வப்போது சில கிசுகிசுக்கள் ஏற்கனவே வந்திருக்கிறது. டோனியுடன் எனக்கு காதல் என்ற பேச்சு பரவலாக இருந்ததால், ஆர்யாவுடன் என்னை அதிகமாக இணைத்து பேசவில்லை. இப்போது, மீண்டும் அந்த தகவலை பரப்பி இருக்கிறார்கள். நிஜமாகவே எங்களுக்குள் ஒன்றுமே இல்லை. உண்மையில் எங்களுக்குள் காதல் இருந்தால், ``இருக்கிறது'' என்று துணிச்சலாக கூறியிருப்பேன். ஆர்யா, எனக்கு நண்பன் மட்டுமே...'' ``உண்மையை சொல்லுங்கள்...டோனியுடன் உங்களுக்கு இருந்தது நட்பா, காதலா?'' ``டோனியும், நானும் நல்ல நண்பர்களாக பழக ஆரம்பித்தோம். ஆரம்பத்தில் மிக சாதாரணமாக இருந்த நட்பு, நாளடைவில் மிக நெருக்கமான நட்பாக மாறியது. அது மேலும் நெருக்கமாகிற சூழ்நிலையில், எங்கள் இருவரையும் பற்றி `கிசுகிசுக்கள்' வர ஆரம்பித்தன. இரண்டு பேரும் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்றெல்லாம் எழுத ஆரம்பித்தார்கள். அதன்பிறகுதான் இருவரும் சுதாரித்துக்கொண்டோம். உண்மையில் நாங்கள் அப்படி பழகவில்லை. டோனியின் வாழ்க்கையில், இன்னொரு பெண் இருப்பது எனக்கு தெரியவந்தது. அதனால் எங்களை பற்றி வந்த வதந்திகள் பற்றி நான் கவலைப்படவில்லை. உண்மை ஒருநாள் தெரியப்போகிறது என்று நம்பினேன். என் நம்பிக்கை வீண்போகவில்லை.'' ``டோனிக்கும், உங்களுக்கும் இடையே இருந்த நட்பு இன்னமும் தொடர்கிறதா, இல்லையா?'' ``தொடர்கிறது. டோனிக்கு நிறைய சினேகிதிகள் இருக்கிறார்கள். அதனால்தானோ என்னவோ, திடீர் திருமணம் செய்துகொண்டார். அவர் திருமணம் நடந்தபோது நான் அமெரிக்காவில் இருந்தேன். நேற்று முன்தினம்தான் சென்னைக்கு திரும்பினேன். வந்ததும், டோனிக்கு போன் மூலம் வாழ்த்து சொன்னேன்.'' ``உங்கள் இரண்டு பேரின் நட்பையும் டோனியின் மனைவி சாக்ஷி எப்படி எடுத்துக்கொள்கிறார்?'' ``டோனிக்கும், எனக்கும் இடையே நட்பு இருப்பது, சாக்ஷிக்கு தெரியும். எங்களை பற்றி நிறைய கிசுகிசு வந்ததும் தெரியும். அவர் தப்பாக எடுத்துக்கொள்ள மாட்டார்.'' ``டோனியையும் நண்பர் என்கிறீர்கள். ஆர்யாவையும் நண்பர் என்கிறீர்கள். அப்படியானால், உங்கள் வருங்கால கணவர் யார், அவரை தேர்ந்தெடுத்து விட்டீர்களா?'' ``இதுவரை வரவில்லை. இனிமேல்தான் வருவார். எனக்கு எதையும் ரகசியமாக வைக்க தெரியாது. நான் யாரையாவது என் வருங்கால கணவராக தேர்ந்தெடுத்திருந்தால், தைரியமாக சொல்லி விடுவேன்.'' ``உங்கள் வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று கற்பனை செய்து இருக்கிறீர்கள்?'' ``நல்லவராக இருக்க வேண்டும். நான் சினிமாவில் இருப்பதால், என்னை புரிந்துகொள்பவராக இருக்க வேண்டும். மரியாதைக்குரியவராக இருக்க வேண்டும். பணம் முக்கியமல்ல. மரியாதைதான் முக்கியம்.'' ``அசினுக்கும், டோனிக்கும் இடையே புதுசாக ஒரு நட்பு மலர்ந்திருப்பதாக சொல்கிறார்களே?'' ``நிச்சயமாக அது வெறும் நட்பாகத்தான் இருக்கும். இருவருக்கும் இடையே எந்த அளவுக்கு நட்பு இருக்கிறது என்று விவரமாக எனக்கு தெரியாது. அதில் நான் தலையிடவும் முடியாது.'' ``போதுமான அளவுக்கு உங்கள் கைவசம் பட வாய்ப்புகள் இருக்கிறதா?'' ``இருக்கிறது. லாரன்ஸ் டைரக்ஷனில், `காஞ்சனா' என்ற படத்தில் நடிக்கிறேன். மோகன்லாலுடன், `கிறிஸ்டியன் பிரதர்ஸ்' என்ற மலையாள படத்தில் நடிக்கிறேன். வெங்கட்பிரபு டைரக்ஷனில், அஜீத் நடிக்கும் `மங்காத்தா' படத்திலும் நடிக்க இருக்கிறேன்.''


Copyright © 2001-2009 by nakkeeran.com