24-ந் தேதி பிரகாஷ்ராஜுடன் திருமணமா?பிரகாஷ்ராஜும் பிரபல இந்திப்படடான்ஸ் மாஸ்டர் போனி வர்மாவும் திருமணம் செய்து கொள்ள போவதாக செய்திகள் பரவியுள்ளன. வருகிற 24-ந் தேதி மும்பையில் இவர்கள் திருமணம் நடக்க உள்ளதாக கூறுப்படுகிறது.

போனிவர்மா தமிழில் பொய், மொழி, வெள்ளித்திரை, விரைவில் ரிலீசாக உள்ள இனிது இனிது படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இனிது இனிது படத்தை பிரகாஷ்ராஜ் தயாரித்துள்ளார். இந்த படத்தை விளம்பரப்படுத்த இருவரும் சென்னை வந்தனர். இருவரும் 24-ந் தேதி திருமணம் செய்து கொள்ளப்போகிறீர்களா? என்று போனிவர்மாவிடம் கேட்ட போது கூறியதாவது: பிரகாஷ்ராஜ் அற்புதமான மனிதர். திறமையான புதுமுகங்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கிறார். அவர்களை ஊக்குவிக்கவும் செய்கிறார்.

அவருக்கும் எனக்கும் இடையே உள்ள தொடர்பு அழகானது. இன்றுவரை அந்த உறவு நன்றாகவே போய்க்கொண்டு இருக்கிறது.

எனக்கும் பிரகாஷ்ராஜுக்கும் திருமணம் நடக்கப்போகிறதா என்ற கேள்விக்கு நான் பதில் சொல்ல மாட்டேன். அதை பிரகாஷ்ராஜுடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

 


புதுமுகங்களுடன் நடிக்கத் தயார் -பிரியாமணி

பிரியாமணிக்கு தமிழில் படங்கள் இல்லை. தமிழ் பட இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தன்னை ஒதுக்குவதாக வருத்தப்படுகிறார். அவர் நடித்தவைகளில் “பருத்திவீரன்” படம் மட்டுமே பரபரப்பாக ஓடியது கடந்த வருடம் நடித்த “ஆறுமுகம்“, “நினைத்தாலே இனிக்கும்” படங்கள் பெரிய அளவில் போகவில்லை.

“ராவணன்” படத்தில் இயக்குனர் மணிரத்னம் சிறிய வேடம் கொடுத்தார். இப்படத்துக்கு பின் நிறைய இந்திப்பட வாய்ப்புகள் வருகின்றன. இதுபற்றி

மணிரத்னம் படத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். “ராவணன்” படம் மூலம் அது நிறைவேறியுள்ளது. இந்த படத்துக்கு பின் நிறைய இந்திப்பட வாய்ப்புகள் வருகின்றன. தற்போது ரக்த சரித்திரா என்ற இந்திப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். நல்ல கதைகள் அமைந்தால் புதுமுகங்கள் ஜோடியாகவும் நடிக்கத் தயார்.

சல்மான்கானுடன் நான் நடிக்க போவதாக செய்திகள் வந்துள்ளன. இது தவறு. அவருடன் நான் நடிக்கவில்லை. பிரியதர்ஷன் பட மொன்றில் என்னை நீக்கிவிட்டு கங்கனாரனாவத்தை நடிக்க வைப்பதாகவும் கிசு கிசு பரவியுள்ளது. அதிலும் உண்மை இல்லை.

அஜித்குமார் நடிக்கும்  50 – வது படம்

film

தமிழ்ப்படம்,வாரணம்ஆயிரம்,பையா ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து விரைவில் வெளிவர இருக்கும் நான் மகான் அல்ல படத்தை தொடர்ந்து கிளவுட் நைன் மூவீஸ் சார்பில் தயாநிதி அழகிரி தயாரித்து வரும் இந்தப் படத்தை சென்னை-600028, சரோஜா, கோவா ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய வெங்கட்பிரபு இயக்குகிறார். அசல் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித்குமார் நடிக்கும் 50 - வது படத்திற்கு “மங்காத்தா” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது

 


 

அஜித்குமார் பதினெட்டு வருட சினிமா வாழ்க்கையின் தொடர்ச்சியாக  தனது பத்தொன்பதாவது வருட சினிமா பயணத்தை தொடரும் இந்த நல்ல நாளில் நாங்கள் அவருடைய 50 - வது படமான மங்காத்தா படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளோம்.  முதல் நாளான இன்று தியேட்டரில் பிரத்தியேகமாக திரையிடுவதற் காகவே அஜித்குமார் தோன்றி நடிக்கும் காட்சிகள் இந்தப் படத்தின் ட்ரைலர் காட்சிக்கான படப்பிடிப்பு நடைபெற்றது.மிக விரைவில் ரசிகர்கள் இந்த படத்தின் ட்ரைலரை தியேட்டரில் காணலாம்.

மங்காத்தா  படத்தில் அஜித்துடன் நடிக்கும் கதாநாயகிகள் யார்? யார்? என்று இன்னும் முடிவாகவில்லை. கதாநாயகிகள் தேர்வு நடைபெற்று வருகிறது. படத்தில் வரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு  திரையுலகின்  முன்னணி  ஹீரோவாக  இருக்கும்  நாகர்ஜுனா நடிக்கிறார். மேலும் இந்தப் படத்தில் பிரேம்ஜிஅமரனுடன் மஹாத் என்ற புதுமுகத்தையும் அறிமுகப்படுத்துகிறேன். படத்தின் என்பது சதவீத காட்சிகள்  வெளிநாடுகளில்  படமாக்கப்பட உள்ளன.

இம்மாத இறுதியில் இப்படத்தின்  முழுமையான  படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு  தொடர்ந்து நடைபெற உள்ளது. வருகிற சம்மர் 2011  – ல்  ரசிகர்களுக்கு கோடை விருந்தாக இந்தப்படம் வெளிவர உள்ளது என்றார்.


நடி‌ப்‌பு‌: அஜி‌த்‌குமா‌ர்‌, நாகர்ஜுனா
இயக்‌கம்‌: வெ‌ங்‌கட்‌பி‌ரபு‌
ஒளிப்பதிவு : சக்திசரவணன்,
படத்தொகுப்பு : பிரவீன்,
இசை : யுவன் ஷங்கர் ராஜா,
சண்டைப்பயிற்சி : செல்வா,
கலை : விதேஷ்
நிர்வாகத் தயாரிப்பு : கே.சுந்தர்ராஜ்,
தலைமை நிர்வாகி : சுஷாந்த்பிரசாத்,
தயாரிப்பு : தயாநிதிஅழகிரி


Copyright © 2001-2009 by nakkeeran.com