நான் மகான் அல்ல

 

வெண்ணிலா கபடிகுழு படத்தை இயக்கிய டைரக்டர் சுசீந்திரன் அடுத்து இயக்கியிருக்கும் புதிய படம் 'நான் மகான் அல்ல'.​ இதில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார்.​ காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார்.​ முக்கிய வேடங்களில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.​ ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. யாரைப் பற்றியும் கவலைப்படாமல் மற்றவர்களை நக்கல்,​​ நையாண்டி செய்து வாழும் ஓர் இளைஞனுடைய வாழ்க்கையில் ஏற்படும் திடீர் திருப்பங்களே கதை.​ இசைக்கும் பாடல்களுக்கும் முக்கியத்துவம் அளித்து ஜனரஞ்சகமான படமாக உருவாகியிருக்கிறது நான் மகான் அல்ல. 

வசனம் -​ பாஸ்கர் சக்தி.​ இசை -​ யுவன்ஷங்கர்ராஜா.​ பாடல்கள் -​ நா.முத்துக்குமார்,​​ யுகபாரதி,​​ பிரான்சிஸ்.​ ஒளிப்பதிவு -​ மதி.​ கலை -​ ராஜீவன்.​ தயாரிப்பு -​ கே.ஈ.ஞானவேல். கிளவுட் நைன் மூவிஸ் சார்பில் தயாநிதி அழகிரி ‌படத்தை வெளியிடுகிறார். .

 விருந்து கொடுக்க மறுத்த அஷ்கா  

6 அடி உயரமும், அட்டகாசமான உடற்கட்டும் கொண்ட ஆந்திர அழகி, அ..ஷ்..கா. அவரை பார்க்கிற திரையுலக புள்ளிகள் சிலர், ``நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க'' என்று ஐஸ் வைக்கிறார்கள். ஆனால், அவர்கள் புகழ்கிற அளவுக்கு அ..ஷ்..கா..வுக்கு வாய்ப்புகள் வந்து குவியவில்லை. முக்கிய புள்ளிகளுக்கு விருந்து கொடுத்தால், நிறைய பட வாய்ப்புகளை பிடித்து விடலாம் என்று `அ..ஷ்..கா'வுக்கு சிலர் யோசனை சொல்லியிருக்கிறார்கள். அந்த யோசனையை `அ..ஷ்..கா.. ஏற்றுக்கொள்ளவில்லை. ``அப்படி விருந்து கொடுத்து வாய்ப்பு தேட வேண்டிய அவசியமில்லை'' என்று அவர் கூறிவிட்டாராம்!

தமிழில் ரிலீசாகும் ஆங்கில படம் “தி எக்ஸ்பென்டபில்ஸ்”  

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் சில்வஸ்டர் ஸ்டாலோன், ஜாஸ்சன் ஸ்டேதம், ஜெட்லி, டால்ப் லாஞ்சன், மிக்கி ரூர்த், ரேண்டிங் கவுட்டர், டெர்ரி குரூஸ், அர்னால்டு, எரிக் ராபர்ட்ஸ், கிரேடேனியல்ஸ், புரூஸ் வில்ஸ், ஸ்டீவ் ஆஸ்டரின் ஆகியோர் இணைந்து நடித்துள்ள ஆங்கில படம் “தி எக்ஸ்பென்ட பில்ஸ்” கதாநாயகிகளாக ஜிஷ்லிஐட்டி, கரிஷ்மா கார்பென்டர்

 

 

எந்திரன் பாடல்கள்... அதிர வைக்கும் சாதனை!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள எந்திரன் திரைப்படத்தின் பாடல்கள் உலகமெங்கும் விற்பனையில் புதிய சாதனை படைத்து வருகிறது.

வெளியான முதல் 48 மணி நேரத்துக்குள் 3 லட்சம் சிடிக்களை விற்றுள்ள திங்க் மியூசிக் நிறுவனம், மேலும் 2 லட்சம் சிடிக்களை தயாரித்துள்ளது. 

தமிழகம் மற்றும் இந்தியாவில் இந்த நிலை என்றால், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து  நாடுகளில் இணையதளம் மூலம் டவுன்லோடு செய்வதில் முதலிடத்தில் உள்ளது எந்திரன். 

ஆப்பிள் நிறுவனத்தின் ஐட்யூன்ஸ் தரவிறக்கத்தில் அமெரிக்காவில் முதலிடத்தில் உள்ளது எந்திரன். இங்கிலாந்தில் கடந்த நான்கு தினங்களாக முதலிடத்தில் இருந்த எந்திரன், இப்போது மூன்றாம் இடத்துக்கு வந்துள்ளது. ஆஸ்திரேலியா , இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் எந்திரன் ஆடியோ பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

எந்திரன் பாடல்கள் வெளியான மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் பாடல் சிடி விற்பனையில் புதிய சாதனையே படைத்துள்ளது எந்திரன் என்கிறது இதற்கான உரிமையைப் பெற்றுள்ள லோட்டஸ் ஃபைவ் ஸ்டார் நிறுவனம். 

இப்போதைய கணிப்பின்படி இந்தியாவில் மட்டும் 10 லட்சம் சிடிக்களுக்கு மேல் விற்பனையாகக் கூடும் என்கிறது திங்க் மியூசிக்

Copyright © 2001-2009 by nakkeeran.com