டாப் 5 படங்கள்


1 . களவாணி
2 . அம்பாசமுத்திரம் அம்பானி
3 . ராவணன்
4 . அங்காடி தெரு
5 . மிளகா

 

 

  

 

 

 

 

 

களவாணி படம் பார்த்த பாரதிராஜா, பாக்யராஜ், அகத்தியன்-இயக்குநருக்குப் பாராட்டு

filmவெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் களவாணி படத்தை இயக்குநர் கள் பாரதிராஜா, கே.பாக்யராஜ், அகத்தின் ஆகியோர் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். படத்தை இயக்கிய இயக்குநர் சற்குணத்தை வெகுவாகப் பாராட்டினர்.

விமல், ஓவியா நடிப்பில் வெளியாகும் களவாணி, பட்டி தொட்டியெங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நடிகர் விமல், நடிகை ஓவியாவின் நடிப்புக்கு ஒருபக்கம் பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், இயக்குநர் சற்குணத்திற்கும் மலை போல குவிந்து கொண்டிருக்கிறதாம் பாராட்டுகள்.

இந்த நிலையில் மதுரை மண்ணின் மைந்தரான இயக்குநர், பாரதிராஜா, தஞ்சைக் களத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட களவாணி படத்தைப் பார்த்தார். அவருடன் இயக்குநர்கள் பாக்யராஜ், அகத்தியன் ஆகியோரும் பார்த்து ரசித்தனர்.

படத்தைப் பார்த்து முடித்ததும், இயக்குநர் சற்குணம், தயாரிப்பாளர் நசீர் உள்ளிட்ட படக் குழுவினர் அனைவரையும் பாராட்டினார்கள் இந்த மூன்று மூத்த இயக்குநர்களும். ஏற்கனவே படத்தின் நாயகன் விமலை, இயக்குநர் பாலா வெகுவாகப் பாராட்டி, இயல்பாக நடிக்கிறாய் என்று பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது


விளம்பரத்தில் நடிக்க ரூ.10 கோடி கேட்ட மல்லிகா

சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி விளம்பரம் படங்கள் மற்றும் விழாக்களில் கலந்து கொள்ள அதிக சம்பளம் கேட்பதில் பாலிவுட் நடிகர், நடிகைகள் இடையே கடும் போட்டா போட்டி நிலவுகிறது. இவர்கள் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்க ரூ.50 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை பெறுகின்றனர். வடமாநிலங்களில் தொழிலதிபர்கள், கோடீஸ்வரர்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் பிரபல நடிகர், நடிகைகளை அழைத்து வந்து ஆட வைப்பது வழக்கமான ஒன்று. இது ஒருபுறம் இருக்க, நகைக்கடை ஒன்றின் விளம்பர தூதராக இருக்கவும், மாடலாக நடிக்கவும் பாலிவுட் கவர்ச்சிப் புயல் என்று அழைக்கப்படும் மல்லிகா ஷெராவத் ரூ.10 கோடி கேட்டுள்ளார். முதலில் தயங்கி அந்நிறுவனத்தினர், பின்னர் வேறுவழியின்றி ரூ.10 கோடி தர சம்மதித்துள்ளனர். விளம்பர படத்தில் நடிக்க இவ்வளவு பெரிய தொகையை சமீபத்தில் பெற்றிருக்கும் நடிகை மல்லிகா ஷெராவத் மட்டுமே .

 

 


Copyright © 2001-2009 by EnvisionTimes.com