சிதம்பரம் பேச்சில் திருப்தியில்லை : சுஷ்மா சுவராஜ் குற்றச்சாட்டு
புதுடில்லி : "வருண் பாதுகாப்பு தொடர்பாக உள்துறை அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்தியளிக்கவில்லை' என, பா.ஜ., மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறினார். பா.ஜ., எம்.பி., வருணுக்கு மிரட்டல் இருப் பதால், அவருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, பா.ஜ., சார்பில் வலியுறுத்தப்பட் டுள்ளது. இது குறித்து பா.ஜ., மூத்த தலைவர் சுஷ்மாவும் லோக்சபாவில் கேள்வி எழுப்பினார்.
ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு குழாய் மூலம் எரிவாயு சப்ளை : லோக்சபாவில் மத்திய அரசு உறுதி
""கிருஷ்ணா - கோதாவரி படுகையான "கேஜி பேசினில்' கிடைக்கும் எரிவாயுவைக் கொண்டு செல்ல, சென்னை - பெங்களூரு - மங்களூர் ஆகிய மூன்று தடங்களில் எரிவாயு குழாய்கள் அமைக்க அதிகாரப்பூர்வ உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த எரிவாயு குழாய்கள் மூலம் தமிழகம் உட்பட தென்மாநிலங்களுக்கு, "கேஜி பேசின்' எரிவாயு எடுத்துச் செல்லப்படும்,'' என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் பார்லிமென்டில் பதிலளித்துள்ளது.
தமிழகத்தில் ஊட்டச்சத்து குறைவு குழந்தைகள் அவதிப்படுவதாக புகார்
""தமிழகத்தில் ஊட்டச்சத்து குறைவு காரணமாக எண்ணற்ற குழந்தைகள் அவதிப்படுகின்றன. ஊட்டச்சத்து குறைவால் அவதிப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இவர்களை காப்பாற்றும் வகையில் முன்னோடி திட்டங்களை செயல்படுத்திட முன்வர வேண்டும்,'' என்று பார்லிமென்டில் கோரிக்கை வைக்கப்பட்டது. ராஜ்யசபாவில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து அ.தி.மு.க., எம்.பி., இளவரசன் பேசியதாவது: தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் குழந்தைகள் பட்டினியால் வாடுவதும், ஊட்டச் சத்து குறைவால் அவதிப்படுவதும் நிகழ்ந்து வருகிறது. ஊட்டச்சத்து குறைவால் அவதியுறுகின்ற குழந்தைகள் மற்ற மாநிலங்களில் இருப்பதைப் போல தமிழகத்திலும் இருப்பதாக அகில உலக உணவுப் பொருள் கொள்கை ஆராய்ச்சி மையம் தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளது. ஊட்டச்சத்து குறைவால் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் எடை குறைந்து காணப்படுகின்றன |